அ.தி.மு.க. ஐடி பிரிவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
தேர்தல் பிரசார யுக்தி, வழிமுறைகள் குறித்து அதிமுக ஐடி பிரிவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.;
மதுரை
அ.தி.மு.க. ஐடி பிரிவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில், இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமான அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவினர் இதில் பங்கேற்றனர்.
வலைதள திண்ணை பிரசாரத்தை முன்னெடுப்பது, சமூக வலைதளங்களுக்கான ஒருங்கிணைந்த யுக்திகள், தகவல் தொழில்நுட்ப பிரசார வழிமுறைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.