திமுக தலைவர் ஸ்டாலின் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு இல்லை என தகவல்

திமுக தலைவர் ஸ்டாலின்-தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-05-07 06:03 GMT
சென்னை

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூன்றாவது அணி அமைக்கும் முடிவோடு தற்போது தென்னிந்திய அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயனை நேற்று தெலுங்கானா  முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்தார். அதேபோல் கர்நாடக முதல்வர்  குமாரசாமியுடன் அவர் நேற்று காலை போனில் பேசினார்.

திமுக தலைவர் ஸ்டாலினை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்க உள்ளார். மே 13-ம் தேதி இதற்காக தேதி குறிக்கப்பட்டது. சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடக்க இருந்தது. இதில் திமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என கூறப்பட்டது. 3-ம் அணி தொடர்பாக ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்திக்க இருந்ததாக தகவல் வெளியானது. இந்த தகவல் காங்கிரஸ் தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்தநிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான நேரம் தி.மு.க தரப்பில் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின்தான் முதன் முதலாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். சென்னையில் நடந்த திமுக கூட்டத்தில் ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார். அதனால் மு.க.ஸ்டாலின் 3-வது அணி குறித்து விரும்பவிலலை என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்