கரூரில் அதிமுக - திமுக இடையே மோதலால் பதற்றம்! போலீஸ் குவிப்பு
கரூர் வெங்கமேடு பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது திமுக - அதிமுகவினர் இடையே மோதல் வெடித்துள்ளது.
கரூர் வெங்கமேடு பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமாக நடைபெற்றது. பிரசாரம் மேற்கொண்ட திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோதல் போக்கு நேரிட்டுள்ளது. இதனையடுத்து கரூர் பேருந்து நிலையம் பகுதியில் அதிமுக - காங்கிரஸ் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவை துணை ராணுவம் மற்றும் காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதற்கிடையே கரூர் வேட்பாளர் ஜோதிமணி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் "கரூர் தொகுதியில் நடந்து கொண்டிருப்பது இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரமல்ல. யுத்தம்! நமது இறுதிக்கட்ட பிரசாரம் திட்டமிட்டபடி மாலை 4- 6 மணிவரை பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் நடைபெறும். இதற்கான நீதிமன்ற உத்திரவினைப் பெற்றிருக்கிறோம். அதிகாரத்தை விட,அராஜகத்தை விட உண்மை வலிமையானது" என பதிவிட்டுள்ளார்.