ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டி கலகலப்பு ஏற்படுத்திய அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டி கலகலப்பு ஏற்படுத்தினார்.

Update: 2019-04-03 13:49 GMT
திருப்பூர் தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு ஆதரவாக கோபிசெட்டிபாளையம் அருகே அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.  அப்போது, செல்வராஜ் மற்றும் பிரியா தம்பதியரின் 10 மாத ஆண் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு அமைச்சரிடம் கொடுத்துள்ளனர்.

அவர் குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயரை வைத்துள்ளார். அருகிலிருந்தவர்கள் குழந்தை ஆண் குழந்தை என்று கூறியதும், உடனே ராமச்சந்திரன் என்று பெயரிட்டார். இந்த சம்பவம் அங்கிருந்த மக்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்