துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை: கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாக தகவல்?

துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் நடந்த வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2019-04-01 05:15 GMT
சென்னை,

வேலூர் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார்.

இந்த சூழலில், துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது.

இந்நிலையில், வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான கல்வி அறக்கட்டளை வளாகத்தில் நடந்த வருமான வரி சோதனையில்  கட்டுக் கட்டாக பணம் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்