பா.ம.க.விற்கு மாம்பழம் சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் உள்ள கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றுள்ளது.;
சென்னை,
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் உள்ள கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 7 தொகுதிகளும், ஒரு மேல்சபை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது 7 தொகுதிகளுக்கான பா.ம.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே உள்ள மாம்பழம் சின்னத்தை ஒதுக்கித்தருமாறு பா.ம.க. தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை பா.ம.க.விற்கு அங்கீகாரம் கிடையாது. அதேநேரம், புதுச்சேரியில் பா.ம.க.விற்கு அங்கீகாரம் உள்ளது. எனவே, பா.ம.க.வின் சின்னமான மாம்பழத்தை இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் வழங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த 20-ந் தேதி தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. எனவே நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ம.க. போட்டியிடும் 7 தொகுதிகளிலும் மாம்பழம் சின்னத்திலேயே போட்டியிடுகிறது.