சிறு, குறு விவசாயிகள் மட்டுமல்ல, அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்வோம் -மு.க.ஸ்டாலின்

சிறு, குறு விவசாயிகள் மட்டுமல்ல, அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்வோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Update: 2019-03-20 05:57 GMT
திருவாரூர்,

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. தற்போதைய சூழ்நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் என்று தேர்தல் களத்தில் 4 முனை போட்டி உருவாகியுள்ளது.

இருப்பினும், அ.தி.மு.க.- தி.மு.க. இரு அணிகளுக்கிடையே தான் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் புதிய தலைமையுடன் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால், அந்த கட்சிகளின் வெற்றி, தோல்வி குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. அதற்கேற்ப அ.தி.மு.க. வும், தி.மு.க.வும் கடந்த 17 ஆம் தேதி, ஒரே நாளில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின.  இரு கட்சிகளும் நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டன.

இந்த நிலையில்,  இன்று காலை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை துவங்கினார். திருவாரூர் சன்னதி தெருவில் இருந்து  மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை துவங்கினார். திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

தொடர்ந்து, திருவாரூர் மணக்கால் கிராமத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். அப்போது, “ திமுக ஆட்சியில் இருந்த கம்பீரம் தற்போது மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு இல்லை. சிறு, குறு விவசாயிகள் மட்டுமல்ல, அனைத்து விவசாய கடன்களை ரத்து செய்வோம்” என்றார்.

மேலும் செய்திகள்