பொள்ளாச்சி கொடூர சம்பவத்தில் மக்களை ஏமாற்ற கண்துடைப்பு நாடகங்கள் வேண்டாம் - ஸ்டாலின் வலியுறுத்தல்

பொள்ளாச்சி கொடூர சம்பவத்தில் மக்களை ஏமாற்ற கண்துடைப்பு நாடகங்கள் வேண்டாம் - ஸ்டாலின் வலியுறுத்தல்

Update: 2019-03-13 10:48 GMT
சென்னை

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பொள்ளாச்சி கொடூர சம்பவத்தில் மக்களை ஏமாற்ற கண்துடைப்பு நாடகங்கள் வேண்டாம். நியாயத்திற்கு புறம்பாக காப்பாற்றப்படுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.  பொள்ளாச்சி விவகாரத்தில் விரைவான விசாரணை தேவை. 

தாமதிப்பதும், தப்பிக்கவிட நினைப்பதும் மக்களின் மனசாட்சிக்கு விரோதமானது.  நியாயத்திற்கு புறம்பாக காப்பாற்றப்படுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.  ஆளும் தரப்பினரை காப்பாற்ற நினைக்கும் முயற்சியில் மட்டுமே ஆட்சியாளர்கள் தீவிரம் காட்டுகிறார்கள் என்றே தோன்றுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்