ஏ.சி.யில் கேஸ் கசிவு ஏற்பட்டு தூங்கிக் கொண்டிருந்த தந்தை, தாய், மகன் பலி

சென்னை கோயம்பேட்டில் ஏ.சி. இயந்திரத்திலிருந்து கேஸ் கசிவு ஏற்பட்டதால் தூங்கிக் கொண்டிருந்த தந்தை, தாய், மகன் ஆகிய மூன்றுபேரும் உயிரிழந்தனர்.;

Update: 2018-10-02 08:31 GMT
சென்னை

சென்னை கோயம்பேடு மேட்டுக்குளத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் சென்னீர்குப்பத்தில் உள்ள டொமினோஸ் பிட்சா நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கலையரசி வீட்டில் இருந்து வந்தார். இவர்களது 8 வயது மகன் கார்த்திகேயன் மேட்டுக்குளத்தில் உள்ள ஒரு பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை இவர்கள் வீட்டுக் கதவு வெகுநேரம் திறக்கப்படாததையடுத்து அக்கம்பக்கத்தினர் கதவைத் உடைத்துப் பார்த்த போது மூவரும் படுக்கை அறையில் பேச்சு மூச்சின்றிக் கிடந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர்கள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இரவு உறங்கிக் கொண்டிருந்த போது ஏசியில் கேஸ்கசிவு ஏற்பட்டு மூச்சுத் திணறலால் மூவரும் உயிரிழந்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். அந்தக் காற்றை சுவாசித்த மூன்று பேரும் தூக்கத்திலேயே இறந்திருக்கலாம் என கூறியுள்ள போலீசார், பிரேத பரிசோதனைக்குப் பிறகே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்கின்றனர்.

மேலும் செய்திகள்