சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.87.24க்கு விற்பனை

சென்னையில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தினை தொட்டு ரூ.87.24க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.;

Update: 2018-10-02 03:12 GMT
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.  கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது.  இதனால் வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது.  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை கடந்த ஜூனில் இருந்து அமலுக்கு வந்தது. இந்த நிலையில் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு முந்தைய நாள் விலையை விட 25 பைசாக்கள் உயர்ந்து ரூ.87.05 ஆகவும், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 32 பைசாக்கள் உயர்ந்து ரூ.79.40 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 19 பைசாக்கள் உயர்ந்து ரூ.87.24க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இதேபோன்று டீசல் விலை 24 பைசாக்கள் உயர்ந்து ரூ.79.64க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்