சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 83% மாணவ, மாணவிகள் தேர்ச்சி

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. #CBSEresults;

Update: 2018-05-26 07:13 GMT
புதுடெல்லி,

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சி.பி.எஸ்.இ.) 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

இதில் 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாள் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதாக கூறப்பட்டது. இதனால் மறுதேர்வு நடத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்தது. இதன்படி பொருளாதாரவியல் பாடத்துக்கான மறுதேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடத்தப்பட்டது. அதேபோல் 10-ம் வகுப்பு வினாத்தாள்களும் வெளியானதாக சர்ச்சை கிளம்பியது. இதற்கிடையில் தேர்வுகள் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், 12-ம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என கல்வித்துறை செயலாளர் அனில் சுவரப் அறிவித்திருந்தார். அதன்படி சி.பி.எஸ்.இ -யின் 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியிடப்பட்டது.

மாணவ-மாணவியர்களுக்காக  cbse.nic.in , cbseresults.nic.in என்ற அதிகாரபூர்வ சி.பி.எஸ்.இ.-யின் இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியானது.

தேர்ச்சி சதவிகித அடிப்படையில் முதல் மூன்று இடங்களை பிடித்த மண்டலங்கள் 


* சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.32% தேர்ச்சியை பெற்று திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்தது.

* சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.87% தேர்ச்சியை பெற்று சென்னை மண்டலம் இரண்டாம் இடம் பிடித்தது.

* சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 89% தேர்ச்சியை பெற்று டெல்லி மண்டலம் மூன்றாம் இடம் பிடித்தது.

* சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.01% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

* காசியாபாத்தை சேர்ந்த மாணவி மேக்னா ஸ்ரீவத்சவா 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

காசியாபாத்தைச் சேர்ந்த மாணவி அனவ்ஷ்கா சந்திரா 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 497 மதிப்பெண்களுடன் 7 பேர் மூன்றாமிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். 




மேலும் செய்திகள்