அதிக அளவில் விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகின்றது - தமிழக அரசு
தமிழத்தில் பிற மாநிலங்களை விட அதிக அளவில் விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ததுள்ளதாக என தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. #TNGovernment
சென்னை,
தமிழகத்தில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சுமார் ரூ.3000 கோடிக்கும் மேல் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் பிற மாநிலங்களை விட அதிக அளிவில் விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டத்தில் கீழ் பதிவு செய்த தகவலையும் வெளியிட்டுள்ளது,
இதைத்தொடா்ந்து காப்பீட்டு கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்காக ரூ.565 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு தரப்பட்டுள்ளது, பின்னா் 2016-2017 ஆம் ஆண்டில் 10.62 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.3,265.39 கோடி வரவு வைக்கப்பட்டு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டு நிறுவனங்களுக்கு மகசூல் விவரம், கட்டண மானியம் வழங்குவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது.
இந்நிலையில், இன்னும் ரூ.453 கோடி தொகையை விவசாயிகளுக்கு வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு அரசு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை தவிர்த்து 31 மாவட்டங்களில் 15.37 லட்சம் விவசாயிகள் சாகுபடி செய்த 31.85 ஏக்கர் பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.