சென்னை விமான நிலையத்தில் 40 கிலோ தங்கம் பறிமுதல்; நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்த இருவர் கைது
சென்னை விமான நிலைய கழிவறையில் கேட்பாரின்றி கிடந்த ரூ.12.60 கோடி மதிப்பிலான 40 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. #ChennaiAirport #GoldBiscuits;
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் ரூ.12.60 கோடி மதிப்பிலான 40 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஹாங்காங்கில் இருந்து சீனாவை சேர்ந்த 2 பேர் கடத்தி வந்தது சுங்கத்துறை விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை விஸ்தரிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் சென்னை நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்த 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.