இதுவரை பார்க்காத ஒரு எதிர்ப்பை, பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் காட்டியுள்ளனர் - ஸ்டாலின்

இதுவரை பார்க்காத ஒரு எதிர்ப்பை, பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் காட்டியுள்ளனர் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #CauveryRights;

Update: 2018-04-12 15:12 GMT
சென்னை,

காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.   பிரதமர் மோடி, திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியைத் தொடங்கி வைக்க இன்று சென்னை வருகை தந்தார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் என்று தமிழக அரசியல்  கட்சியினர் தெரிவித்திருந்தனர். அதன் படி இன்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு பல்வேறு அமைப்பினர் கருப்பு கொடி போரட்டம் நடத்தினர். 

இந்தநிலையில் இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

காவிரி விவகாரத்தில் அரசியல் வாழ்வில் இதுவரை பார்க்காத ஒரு எதிர்ப்பை, பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் காட்டியுள்ளனர். கருப்புக் கொடி போராட்டத்தை மிகப்பெரிய வெற்றிப் போராட்டமாக மாற்றிய அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்