பிரதமர் வரும்போது கருப்பு கொடியுடன் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம்- பாரதிராஜா
நாளை பிரதமர் வரும்போது கருப்புக் கொடி காட்டுவது நிச்சயம். கருப்பு கொடியுடன் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம் என பாரதிராஜா தெரிவித்தனர். #Bharathiraja #IPL2018;
சென்னை
தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், கவுதமன், அமீர், மற்றும் கருணாஸ், தமிமூன் அன்சாரி, தனியரசு கூட்டாக பேட்டி அளித்தனர்.
பாரதிராஜா கூறியதாவது :-
சிலர் (ரஜினி) நேற்று நடந்ததை வன்முறை என்கின்றனர். அது வன்முறையல்ல; எதிர்வினை. அதனால் எதிர்வினையை மட்டும் பூதாகரமாக பேசுவது சரியல்ல
நாளை பிரதமர் வரும்போது கருப்புக் கொடி காட்டுவது நிச்சயம்; ஆனால் எங்கு என்பதை கூற முடியாது. எங்களது எதிர்கால போராட்டங்கள் வேறுவிதமாக இருக்கும்.வரும் 20ம் தேதி ஐபிஎல் நடக்கும்போது போராட்டம் வேறுவிதமாக இருக்கும் .போராட்டத்தில் என்னை கைது செய்தனர்; அது பற்றி ரஜினி பேசவில்லை. கூடைக்குள் இருப்பது பூ அல்ல; பூ நாகம் என இப்போதுதான் தெரியவந்துள்ளது. போராட்டத்தின் போது நான் போலீசாரை தாக்கவில்லை, யாரையும் தாக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமில்லை. ரஜினி வாய் மட்டுமே அசைக்கிறார்; அவருக்கு வேறு யாரோ குரல் கொடுக்கின்றனர்.
கருப்பு கொடியுடன் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.