உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் சென்னையில் காலமானார்
உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 89. #SupremeCourtOfIndia #RetiredJustice;
சென்னை,
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர் ரத்தினவேல் பாண்டியன். சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாகவும் இவர் இருந்துள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக கடந்த 1988ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரை இவர் பணியாற்றி உள்ளார். ஓய்வு பெற்ற பின்னர் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் சென்னையில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.
இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் இன்று காலமானார்.
இவரது மகன் சுப்பையா சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து வருகிறார்.