மாணவர்கள் தற்கொலை? பட்டியல் அளிக்க முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவு
பள்ளி ஆசிரியர்களின் தொந்தரவினால், கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்ற பட்டியலை அளிக்க வேண்டுமென அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள பனப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த 4 மாணவிகள் கடந்த நவம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டனர். படிப்பில் அக்கறை காட்டாததால் ஆசிரியர்கள் மாணவிகளை திட்டியதோடு, அவர்களது பெற்றோரை அழைத்து வரச்சொன்னதால் மாணவிகள் தற்கொலை முடிவை எடுத்ததாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக அந்த பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதனையடுத்து ஆசிரியர்கள் தொந்தரவால் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் விதமாக, முதல் கட்டமாக 2014-2015, 2015-2016, 2016-2017 ஆகிய 3 கல்வி ஆண்டுகளில் எத்தனை மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து இருக்கிறார்கள் என்பது குறித்த பட்டியலை தயாரிக்க பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் முடிவு செய்தது.
இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மேற்படி 3 கல்வி ஆண்டுகளில் ஆசிரியர் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் பட்டியலை அளிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
அதில், ‘பள்ளிகளில் ஆசிரியர்களின் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவ-மாணவிகளின் விவரங்களை 22-ந்தேதி (நேற்று முன்தினம்) மாலை 5 மணிக்குள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் அனுப்ப வேண்டும். அப்படி எதுவும் சம்பவம் நடக்கவில்லை என்றால் ‘இல்லை’ என்ற அறிக்கையை அளிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் தொந்தரவினால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களை பற்றிய விவரம், தற்கொலைக்கான காரணம், தற்கொலைக்கு காரணமான ஆசிரியர், தலைமை ஆசிரியர், தாளாளர் பெயர், காவல் துறை வழக்கு விவரம், வழக்கின் தற்போதைய நிலை ஆகிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த அறிக்கையை முதன்மைக்கல்வி அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை தான் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி இருக்கிறார்கள். அன்று மாலையிலேயே தகவல்களை அளிக்க சுற்றறிக்கையில் உத்தரவிடப்பட்டு இருந்தது. மேலும் உண்மைக்கு மாறாக தகவல்களை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுவரை எந்தெந்த மாவட்டங்களில் இருந்து பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு பட்டியல் வந்திருக்கிறது என்ற தகவல் தெரியவில்லை.
இந்த சுற்றறிக்கை பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘ஆசிரியர்களுக்கு மாணவ -மாணவிகளை வழி நடத்துவது தொடர்பாக முறையான ஆலோசனை வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தனர்.