ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா மக்களின் பணத்தேவையும், ஆசையும் காரணம் தேர்தல் அதிகாரி கருத்து

மக்களின் பணத் தேவையையும், ஆசையையும் தேர்தல் கமிஷனால் நிறுத்த முடியாது என்று தேர்தல் அதிகாரி கருத்து தெரிவித்தார்.

Update: 2017-12-19 21:15 GMT
ந்தியா முழுவதும் பல பொதுத்தேர்தல்கள், இடைத்தேர்தல்களை நடத்தி வரும் இந்திய தேர்தல் கமிஷன், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை நடத்துவதற்குள் கடுமையான சோதனைகளை சந்தித்து வருகிறது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை ஒருமுறை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் கமிஷனுக்கு காலஅவகாசம் தேவைப்பட்டது.

ஆனால் வழக்கு ஒன்றில் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வேறு வழியில்லாமல் இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்காக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளும், 3 ஆயிரத்து 300 போலீசாரும் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

ஆனாலும் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதுபற்றி கேட்டபோது அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பணப்பட்டுவாடா என்பது இரண்டு தரப்பில் நடக்கும் தவறாகும். ஒரு பக்கத்தை மட்டும் கண்காணித்து தடுப்பதால் மட்டுமே இந்த குற்றத்தை நிறுத்திவிட முடியாது. பணம் கொடுக்கும் தரப்பை என்னதான் ஒடுக்கினாலும், வாங்குவதற்கு மக்கள் தயாராக இருந்தால், புதுப்புது வழிகளை கையாண்டு, பணத்தை அவர்கள் கையில் சேர்த்துவிடுவார்கள்.

எனவேதான் எத்தனை அதிகாரத்தை செலுத்தினாலும் மக்கள் ஒத்துழைக்காவிட்டால் பணப்பட்டுவாடாவை தற்போதுள்ள சட்டங்களின்படி நிறுத்திவிட முடியாது. மக்களின் பணத் தேவையையும், ஆசையையும் தேர்தல் கமிஷனால் நிறுத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்