ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ரூ.100 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்துள்ளது: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ரூ.100 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்துள்ளது என மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2017-12-17 06:55 GMT
சென்னை,

ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது என புகார் எழுந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரி பத்ரா அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  
இக்கூட்டத்தில், ஆளும் அ.தி.மு.க., எதிர்க்கட்சியான தி.மு.க., பாரதீய ஜனதா மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தேர்தல் அதிகாரி பத்ராவுடன் நடந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மு.க. ஸ்டாலின், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ரூ.100 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்துள்ளது.  பணப்பட்டுவாடா நடைபெறுகிறது என தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் அவர்கள் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.

தேர்தல் அதிகாரிகளும், காவல் துறையும் திட்டமிட்டு இதற்கு உடந்தையாக உள்ளனர்.  பணப்பட்டுவாடாவை தடுக்க வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆர்.கே. நகர் தேர்தலை நிறுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் தி.மு.க. முறையிடவில்லை.  முறைகேடுகளை களைய வேண்டும் என்பதே தி.மு.க.வின் நோக்கம் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்