தா.பாண்டியனுடன் திருநாவுக்கரசர், ஜி.கே.வாசன் சந்திப்பு
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் கடந்த 9–ந்தேதி கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சளி மற்றும் மூச்சித் திணறலால் அனுமதிக்கப்பட்டார்.;
சென்னை,
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் கடந்த 9–ந்தேதி கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சளி மற்றும் மூச்சித் திணறலால் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று காலை நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
அப்போது அங்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறும்போது, மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக நாளை(13–ந் தேதி) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். மேலும் இது குறித்து தேவைப்பட்டால் ஆளுனரை சந்திப்போம், என்றார்.