வெப்பச்சலனத்தால் தென்மாவட்டங்களில் மழை சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:–
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடதமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எங்குமே கனமழைக்கு வாய்ப்பு இல்லை. சென்னையில் வானம் ஒரு பகுதி மேக மூட்டத்துடன் காணப்படும். அதிக பட்ச வெப்பநிலை 32 டிகிரியும், குறைந்த பட்சம் 23 டிகிரியாகவும் இருக்கும்.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் நாகர்கோவில், மணிமுத்தாறு ஆகிய இடங்களில் தலா 5 சென்டி மீட்டர், மையிலாடியில்–3, குளித்துறை, பூதப்பாண்டி, பேச்சிப்பாறையில் தலா 2, செங்கோட்டை, தக்கலையில் தலா 1 சென்டி மீட்டர் மழை பெய்தது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.