ஓகி புயல்: குமரி மாவட்டத்தில் 72 மணி நேரத்தில் மின் விநியோகம் முழுமையாக வழங்கப்படும் அதிகாரி தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 72 மணி நேரத்தில் அனைத்து பணிகளும் முடிந்து, மின் விநியோகம் முழுமையாக வழங்கப்படும் என மின்சாரத்துறை செயலாளர் கூறி உள்ளார்.;

Update: 2017-12-05 12:06 GMT

சென்னை

ஒகி புயல் தாக்குதல் காரணமாக குமரி மாவட் டத்தில் கடுமையான  பாதிப்புகளும், சேதங்களும் ஏற்பட்டு உள்ளது. இதைதொடர்ந்து சீரமைப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

ஆனாலும் பாதிப்பு மிக அதிகமாக உள்ளதாலும் மாவட்ட தலைநகரான நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து விழுந்துவிட்டதாலும் மின்சார வினியோகம் தடைபட்டுள்ளது.

நாகர்கோவில் நகரம் உள்பட ஒவ்வொரு பகுதியாக மின் வினியோகம் சீரமைக் கப்பட்டு வருகிறது. ஆனால் இன்று 6 வது நாளாக சீரான மின் வினியோகம் கிடைக்க வில்லை. பல பகுதிகளுக்கு மின்சார இணைப்பு கொடுக்க முடியாத நிலையே காணப்படுகிறது. மேலும் மின் வினியோகம் இல்லாததால் குடிநீர் சப்ளையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குடிநீருக்காக பெண்கள் அலையும் பரிதாப நிலையும் உள்ளது.

புயல் பாதிப்பு குறித்து அதிகாரிகள் இன்று பேட்டி அளித்தனர்.

மீன்வளத்துறை இயக்குநர் கோபால் கூறும் போது :-

 புயலால் மாயமான 1,279 விசைப்படகுகளில் 975 படகுகள் பாதுகாப்பாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் குறித்து லட்சதீவு பகுதியில் இருந்து  இன்னும் முழு தகவல் வரவில்லை.

வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி  கூறியதாவது;-

வி.ஏ.ஓ மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு பயிர் சேதங்கள் கணக்கிடப்படும்.. வேளாண் துறையில் 54 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் பயிர் சேதம் கணக்கிடும் பணியை முடிக்க திட்டம். ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,500 ஹெக்டேர் வாழைகள் சேதம் அடைந்துள்ளது என கூறினார்.

மின்சாரத்துறை செயலாளர் கூறியதாவது:-

புயலால் சேதமடைந்த 10,000 மின்கம்பங்களில் 7,000 மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன . கன்னியாகுமரி மாவட்டத்தில் 72 மணி நேரத்தில் அனைத்து பணிகளும் முடிந்து, மின் விநியோகம் முழுமையாக வழங்கப்படும்

புயல் கண்காணிப்பு அலுவலர் ராமச்சந்திரன் ஒகி புயலால் உயிரிழந்த 10 பேரில், 5 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது எனகூறினார்.

மேலும் செய்திகள்