தற்போதைய ஆட்சி தொடரக்கூடாது என பலரும் திட்டம்போட்டு வருகிறார்கள்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தற்போதைய ஆட்சி தொடரக்கூடாது என பலரும் திட்டம்போட்டு வருகிறார்கள் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.;

Update: 2017-11-12 11:11 GMT
நெல்லை,

நெல்லையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில், துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பேசியதாவது:-  தமிழக மக்களின் இதயங்களில் மக்கள் திலகமாக விளங்குபவர் எம்.ஜி.ஆர். எம்ஜிஆர் போலவே வாரி வழங்கிய அட்சயப் பாத்திரம் ஜெயலலிதா. மறக்க முடியாத மாபெரும் தலைவராக மக்கள் மனங்களில் எம்ஜிஆர் வாழ்கிறார்.

 முதலமைச்சராக ஸ்டாலின் முயன்றும் எதுவும் மக்களிடம் எடுபடவில்லை. தற்போதைய ஆட்சி தொடரக்கூடாது என பலரும் திட்டம்போட்டு வருகிறார்கள்.  எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தமிழக மக்கள் ராமச்சந்திர ஜெயந்தியாக கொண்டாடி வருகிறார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக அழிந்து விடும் என ஸ்டாலின் நினைத்தார்.குடும்ப ஆதிக்கம் புகாமல் அதிமுக ஆட்சி தொடரும்"  இவ்வாறு அவர் கூறினார்.
 

மேலும் செய்திகள்