திருவாரூரில் கனமழையால் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

திருவாரூரில் கனமழையால் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.;

Update: 2017-11-11 03:15 GMT
திருவாரூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் இறுதியில் தொடங்கியது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது.

தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. பள்ளி செல்லும் மாணவ மாணவியர் அதிக சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மழையால் விடுமுறை அறிவிப்பும் வெளியானது.

இந்நிலையில் சில நாட்களாக இயல்பு வாழ்க்கை திரும்பி வந்த நிலையில் திருவாரூரில் பெய்து வரும் கனமழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்