தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை கூட பராமரிக்க தெரியவில்லை முதல்-அமைச்சருக்கு, மு.க.ஸ்டாலின் பதிலடி
தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை கூட அ.தி.மு.க. அரசுக்கு பராமரிக்க தெரியவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;
சென்னை,
சென்னை மாநகரில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை கூட அ.தி.மு.க. அரசுக்கு பராமரிக்க தெரியவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பழங்குடியினர் உள்ளிட்டோருக்கு உரிய முறையில் இடஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் கோரிக்கை. அதனை செயல்படுத்த முடியாமல், தோல்வி பயத்தில் நடுநடுங்கி, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள் தமிழகத்தை ஆளும் குதிரை பேர அரசாங்கத்தினர்.
வெயில் அடிக்கும் நேரத்திலேயே மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் பற்றி பருவமழை தொடங்கிய பிறகே ஆலோசித்து அரசாணை வெளியிடுகிறார்கள். பொதுப்பணித்துறையில் நடந்த இந்த கேலிக்கூத்தான செயலை ஊடகங்கள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளன. தாமதமான பணிகளால், அதிகமான அளவில் பருவமழை பொழிந்தும், அந்த நீரை பாதுகாக்காமல் ஏறத்தாழ 100 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது என்று பத்திரிகை செய்திகள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகின்றன.
குடிமராமத்து பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் என்னென்ன வேலைகள் நடந்துள்ளன என வெள்ளை அறிக்கை கேட்டால், மழைவெள்ள பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்ட பிறகு, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பணிபுரியும் சார்ஜாவில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பங்கேற்பதற்காகச் சென்ற என்னை நோக்கி, மழை பெய்யும் நேரத்தில் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றது ஏன்? என பாய்கிறார்கள் அமைச்சர்கள். ஆட்சியிலிருப்பது அவர்களா? நாமா? அமைச்சர்களே தன்னை மிஞ்சிப் பேசுகிறார்களே என்று நினைத்த முதல்-அமைச்சர், அரசு செலவில் நடத்திக்கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் என் மீது பாய்ந்து, காழ்ப்புணர்வு அரசியலை கக்கியிருக்கிறார்.
1996-ம் ஆண்டில் சென்னை மேயராக பொறுப்பேற்ற போதும், 2006-ம் ஆண்டில் உள்ளாட்சித்துறைக்கு பொறுப்பேற்ற போதும் சென்னை மாநகரத்தின் கட்டமைப்பை நவீன யுகத்திற்கேற்ப மாற்றியமைத்ததை பொதுமக்களே சொல்வார்கள். முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் கார்களில் பயணிக்கும்போது அவர்கள் கடந்து செல்கின்ற தி.மு.க. ஆட்சிக்காலத்து மேம்பாலங்களும் அதனையொட்டி அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களும் தி.மு.க. அரசின் தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தும்.
கூவம் ஆற்றை சுத்தப்படுத்துதல் உள்பட சென்னை மாநகரில் மழை நீர் தேங்காமல் இருக்க தி.மு.க. அரசு மேற்கொண்ட பணிகளை நிறைவேற்றிய திட்டங்களை சரியாக பராமரிக்கக்கூடத் திறனற்ற குதிரைபேர அரசு நடத்துவோர் என் மீது பாய்வதை விடுத்து, மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்.
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களை இன்றைய ஆட்சியாளர்கள் என்ன லட்சணத்தில் செயல்படுத்துகிறார்கள் என்பதற்கு அண்மையில் ஓர் ஆதாரம் மக்களின் நேரடி அனுபவத்தால் வெளிப்பட்டுள்ளது. பருவமழையால் வெள்ளக்காடாகி, பயிர்கள் மூழ்கிய நாகை-திருவாரூர்-தஞ்சை டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆறுதல் கூறி, நிவாரண உதவிகள் செய்து விட்டு, தஞ்சை நகரத்தில் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டு, 6 ஆண்டுகளுக்கும் மேல் தாமதப்படுத்தி தற்போதைய ஆட்சியாளர்களால் நிறைவுபெற்றிருக்கும் மேம்பாலத்தில், மக்கள் பயன்பாடு முழுமையாகத் தொடங்குவதற்கு முன், விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
அந்த விரிசல்களை ஒட்டுப்போட்டு சமாளிக்கும் குதிரைபேர அரசை ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்த மக்களே விமர்சிக்கிறார்கள். பாலத்திற்கு பஞ்சர் போட்ட விஞ்ஞானிகளைக் கொண்ட அரசு என சமூக வலைத்தளங்கள் சித்தரிக்கின்றன.
இத்தகைய ஆட்சியை நடத்துபவர்கள்தான், மு.க. ஸ்டாலின் என்ன செய்தார் என்று கேட்கிறார்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் உள்ளங்களில் ஆட்சி செய்வது தி.மு.க. தான். அதனால்தான், குதிரைபேர ஆட்சியாளர்கள் செயலிழந்து கிடக்கும் நிலையிலும், என்னுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று, எதிர்க்கட்சியான தி.மு.க.வினர் தங்கள் சொந்த செலவில் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான நீர்நிலைகளை பருவமழைக்கு முன்பே தூர்வாரி செப்பனிட்டனர்.
கொளுத்தும் கோடைகாலமான மே மாதத்தில் தொடங்கி, பருவமழைக்காலமான நவம்பர் மாத தொடக்கம் வரை 44 நீர்நிலைகளை நான் நேரில் சென்று பார்வையிட்டு, மக்களின் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்துள்ளேன். தானும் பணி செய்யாமல் எதிர்க்கட்சியையும் பணி செய்யவிடாமல் தடுக்கும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காழ்ப்புணர்வுடன் செயல்பட்ட நிலையிலும், நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்று, ஆகஸ்டு மாதத்தில் சேலம் மாவட்ட எடப்பாடியில் உள்ள கட்சராயன் ஏரியை மக்களின் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தேன். பருவமழை தொடங்கும் நிலையில் நவம்பர் முதல் தேதியில் திருவெறும்பூர் தொகுதி சந்தூரணி நீர்நிலை தூர்வாரப்பட்டுள்ளது.
அரசாங்கம் தூங்கிக்கிடந்த நிலையில், தி.மு.க.வினர் விழிப்புற்று, முன்கூட்டியே தூர்வாரியதன் காரணமாக, பருவமழையில் கிடைத்த நீர் வீணாகாமல் அந்த நீர்நிலைகளில் நிரம்பியிருப்பதுடன் சுற்றுவட்டாரத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் துணை புரிந்துள்ளது. முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட இந்த பணிகளுடன், பருவமழை நேரத்தில் குதிரை பேர அரசின் அலட்சியத்தால் உயிர்ப்பலியும் உடைமை இழப்புகளும் ஏற்பட்ட இடங்களுக்கும் சென்று தி.மு.க.வினர் உதவிகளை செய்து வருகிறார்கள்.
இந்த முன்னெடுப்புகள் தொடர்ந்து நடைபெறவேண்டும். திறமையற்ற ஆட்சியாளர்கள் செயலிழந்து கிடந்தாலும் தி.மு.க.வின் செயல்பாடுகள் தொடரும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.