வருமான வரி சோதனையில் கைப்பற்றபட்ட 60 போலி நிறுவனங்கள் ஆவணங்களை மதிப்பிடும் பணி தொடக்கம்
வருமான வரி சோதனையில் கைப்பற்றபட்ட 60 போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களை மதிப்பிடும் பணி தொடங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;
சென்னை
தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட 187 இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் 40 இடங்களில் நிறைவு - மற்ற இடங்களில் சோதனை தொடர்கிறது. கைப்பற்றப்பட்ட 60 போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களை மதிப்பிடும் பணி தொடர்கிறது.
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான ஆரோவில் பொம்மையார்பாளையத்தில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது. இங்கு மாட்டுப்பண்ணை, விவசாய தோட்டங்கள் ஆகியவை உள்ளன. நவீன வசதிகளுடன் கூடிய பங்களாவும் உள்ளது.
சோதனையின்போது பண்ணை வீட்டின் ஒரு பகுதியில் கீழ் தளத்தில் இரண்டு பாதாள அறைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பாதாள அறைகளின் கதவுகளில் நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட ‘எலக்ட்ரானிக்ஸ் லாக்’ பொருத்தப்பட்டு இருந்தது. அதை திறக்க முடியாமல் அதிகாரிகள் திணறினார்கள். பலத்த முயற்சிக்கு பின்னர் அந்த பாதாள அறைகளின் கதவுகள் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த அறைகளிலும் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அங்கு ஏராளமான ஆவணங்கள் பதுக்கி வைத்து இருந்ததாகவும் அவற்றை வருமானவரி துறை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. அந்த அறையில் பறிமுதல் செய்யப்பட்டவை என்ன? என்பது பற்றிய விவரங்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
அந்த ஆவணங்களை ஆய்வு செய்யவும், பண்ணை வீட்டில் தொடர்ந்து சோதனையை தீவிரப்படுத்தவும் சென்னையில் இருந்து மேலும் 2 வருமானவரித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். ஏற்கனவே சோதனையில் ஈடுபட்டு இருந்த 7 அதிகாரிகளுடன் இவர்களும் சேர்ந்து நடவடிக்கை மேற்கொண்டனர். இரவு 9.30 மணி அளவில் சோதனையை முடித்துக் கொண்டு அங்கிருந்து கார்களில் அதிகாரிகள் வெளியே வந்தனர். காலை 7 மணி முதல் இரவு வரை சுமார் 14½ மணி நேரம் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
பாதாள அறையின் ஒன்றுக்கு மட்டும் சீல் வைத்தனர். மேலும் பண்ணை வீட்டின் காவலாளியை தனியறையில் வைத்து விசாரணை நடத்தினர்.
மேலும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையின் போது மொத்தம் 60 போலி நிறுவன ஆவணங்கள் கைப்பற்றபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 60 போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களை மதிப்பிடும் பணி தொடங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.