வருமான வரித்துறையினர் சோதனை இன்றும் தொடரும் இடங்கள் விவரம்

இன்று 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Update: 2017-11-10 05:16 GMT
சென்னை

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருப்பதால், அவரது உறவினரான டி.டி.வி.தினகரன் சசிகலா அணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார். இந்த நிலையில், சசிகலா, தினகரன், சசிகலாவின் கணவர் நடராஜன், சகோதரர் திவாகரன், அண்ணன் மனைவி இளவரசியின் மகன் விவேக் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள், எஸ்டேட்டுகள் உள்ளிட்ட 187 இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இன்றும் 2 வது நாளாக வருமான வரி சோதனை தொடருகிறது.

விவேக் வீட்டில் வருமான வரி சோதனை இன்றும் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் விவேக்கிடம் எழுத்துப்பூர்வமாக அறிக்கை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 இளவரசியின் மகன் விவேக் வீட்டில் நேற்று காலை தொடங்கிய வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மன்னார்குடியில் திவாகரன், தினகரன் வீடுகள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகள் உள்ளிட்ட 15 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை.  திவாகரன் வீடு மற்றும் அவரது கல்லூரியில் இன்றும் சோதனை தொடர்கிறது.

வரித்துறையினர் சோதனை இன்றும் தொடரும் இடங்கள் :-

* தஞ்சையில் மகாதேவன் மற்றும் ராஜேஸ்வரன் வீடு

* நாமக்கல்லில் சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் வீடு உட்பட 4 இடங்களில்   வருமான வரித்துறை சோதனை.

* சென்னை : ஜெயா டி.வி., டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழ் அலுவலகங்கள் மற்றும் கிருஷ்ணப்பிரியா வீட்டில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை.

* வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ்.

* சென்னை போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா டிவி அலுவலகத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை.

* இளவரசியின் மகன் விவேக் வீடு,

* தினகரன் ஜோதிடர் சந்திரசேகர் வீடு,

* கோடநாடு கிரீன் டீ எஸ்டேட் மற்றும் தேயிலை தோட்ட மேலாளர் நடராஜனிடம் விசாரணை.

* மன்னார்குடியில் திவாகரன், தினகரன் வீடுகள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகள் உள்ளிட்ட 15 இடங்களில் சோதனை.

* திவாகரன் வீடு மற்றும் அவரது கல்லூரி,

* லஷ்மி ஜூவல்லர்ஸ் கடையில் 2வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை.

* ஈரோடு : சத்தியமங்கலம் அருகே உள்ள காகித ஆலை.

மேலும் செய்திகள்