சென்னையில் இன்று காலை பரவலாக மழை

சென்னையில் அடையாறு, தரமணி, திருவான்மியூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

Update: 2017-11-10 04:50 GMT

சென்னையில் அடையாறு, தரமணி, திருவான்மியூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில் சென்னையில் கடந்த ஐந்து நாட்களாக மழை ஏதும் இல்லை. இந்நிலையில் இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு .  கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னையில் ஒரு சில முறையும் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இதனை தொடர்ந்து  சென்னையில் எழும்பூர் ,அடையாறு, தரமணி, திருவான்மியூர், புரசைவாக்கம், அண்ணாநகர், புழுதிவாக்கம், கந்தஞ்சாவடி, ஆதம்பாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட பலபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேலும் செய்திகள்