இரட்டை இலைக்கு லஞ்சம்: தினகரன் மீது டிச.5க்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய டெல்லி கோர்ட் உத்தரவு

தினகரனுக்கு எதிராக டிச.5க்குள் துணை குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் போலீசாருக்கு டெல்லி கீழமை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டு உள்ளது.

Update: 2017-11-09 08:06 GMT
புதுடெல்லி,

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்டு நரேஷ் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது  செய்யபட்டனர். இந்த வழக்கில் தினகரன் ஜாமீனில் வெளியே உள்ளார்.

இந்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் நீதிமன்ற காவல் நவம்பர் 23 ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில்  தினகரனுக்கு எதிராக டிச.5க்குள் துணை குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்  போலீசாருக்கு டெல்லி கீழமை நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்