ஊராட்சி செயலாளர்கள் செலவழித்த தொகையை தமிழக அரசு தணிக்கை செய்து உடனடியாக வழங்கவேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
ஊராட்சி செயலாளர்கள் செலவழித்த தொகையை தமிழக அரசு தணிக்கை செய்து உடனடியாக வழங்கவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.;
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்து விட்டது. அதன்பின் ஒரு ஆண்டு ஆகியும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. வருகிற பிப்ரவரி மாதம் வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று ஐகோர்ட்டில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாததால் கிராம ஊராட்சிகளின் அன்றாட செலவுகளுக்குக் கூட நிதி கிடைப்பதில்லை.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளில் 4000-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் வருவாய்க்கு வழியே இல்லாததால் அவற்றின் செயலாளர்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளும்படி ஊராட்சி செயலாளர்களுக்கு அதிகாரிகள் ஆணையிட்டுள்ளனர். ஆனால், இதற்காக ஒரு பைசா கூட நிதி ஒதுக்கப்படவில்லை. அதனால், கிராம ஊராட்சி செயலாளர்கள் கடன் வாங்கி டெங்கு கட்டுப்பாட்டு பணிகளை மேற்கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் ஊராட்சி அமைப்புகளில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஊராட்சி செயலாளர்கள் லட்சக் கணக்கில், கடன் வாங்கி செலவழித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கடந்த சில மாதங்களில் 84 ஊராட்சி செயலாளர்கள் உயிரிழந்திருப்பதாக ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதற்கெல்லாம் தமிழக அரசு தான் பொறுப்பேற்கவேண்டும்.
அதுமட்டுமின்றி, கிராம ஊராட்சி செயலாளர்கள் தங்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்த கோரிக்கை நியாயமானது என்பதால் அதையேற்று அவர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியம் வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும். ஊராட்சிக்காக கிராம ஊராட்சி செயலாளர்கள் இதுவரை செலவழித்துள்ள தொகையை உரிய தணிக்கைகளுக்கு பிறகு உடனடியாக வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.