மதுரை கலெக்டர் அலுவலகத்தில் 3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
வீட்டை அபகரிக்க முயல்வதாக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் 3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்.
மதுரை,
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் திவ்யா. இவர் இன்று 3 குழந்தைகள் மற்றும் உறவினர்கள் முல்லைக் கொடி, பவுன் ராணி ஆகியோருடன் மதுரை கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் அங்குள்ள அதிகாரிகளிடம் மனு கொடுக்க காத்திருந்தார்.
அப்போது தான் மறைத்து கொண்டு வந்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து திடீரென தன் மீதும், 3 குழந்தைகள் மீதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். விரைந்து செயல்பட்ட அவர்கள் திவ்யாவை தடுத்து நிறுத்தி குழந்தைகளையும் மீட்டு தீக்குளிப்பை தடுத்தனர். திவ்யா மற்றும் அவருடன் வந்த முல்லைக்கொடி, பவுன்ராணி ஆகியோர் தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர் களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திவ்யா கூறியதாவது:-
நானும் எனது கணவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டோம். 5 மாதங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டார்.எனது அத்தை தேவகி மீது அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கஞ்சா விற்பதாக பொய்யான தகவலை போலீசில் கூறினர். அதன் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர். அதன் பின்னும் என்னுடைய தம்பி கோபி, கணவரின் தம்பி மகாராஜனையும் தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் மிரட்டி வருகின்றனர்.
இந்த ஊரை விட்டு போக வேண்டும். மீறி குடியிருந்தால் கொலை செய்வோம் என்று அந்த கும்பல் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு நான், உறவினர்கள் முல்லைக்கொடி, பவுன்ராணி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தேன். அப்போது அங்கு வந்த கும்பல் எங்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தது. கற்களை வீசி தாக்குதலும் நடத்தியது.
இதுகுறித்து நான் இன்று காலை ஒத்தக்கடை போலீசில் புகார் தெரிவித்தேன். இதை அறிந்த அந்த கும்பல் மீண்டும் என்னுடைய வீட்டுக்கு வந்து கொலை மிரட்டல் விடுத்த தோடு விபசாரம் செய்வதாக புகார் கூறுவோம் என்று மிரட்டியது.
மேலும் எனது வீட்டை அபகரிக்கும் நோக்கில் பொய்யான தகவலை பரப்பியும், ஊர் கட்டுப்பாடு விதித்தும் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கக்கூடாது என்றும், யாருடனும் பேசக்கூடாது என்றும் தொடர்ச்சியாக அந்த கும்பல் பழி வாங்கி வருகிறது. எனவே எனது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி 3 குழந்தை களுடன் தீக்குளிக்க முயன்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சில வாரங்களுக்கு முன்பு கந்து வட்டி கொடுமை யால் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து கலெக்டர் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பை மீறி பெண் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.