வங்கக் கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது- சென்னை வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.;

Update: 2017-11-06 08:23 GMT
சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம்  கூறி இருப்பதாவது:-

வங்கக் கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.இதனால் தென்தமிழகம், டெல்டா, புதுக்கோட்டை, காரைக்காலில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  கடலோர மாவட்டங்களில் பல இடங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும் கனமழை பெய்யும். ஏற்கனவே இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து விட்டது.

வடகிழக்கு பருவமழை வழக்கமான 23 செ.மீ.க்கு பதில் 1 செ.மீ. குறைந்து 22 செ.மீ. வரை பெய்துள்ளது.

மேலும் செய்திகள்