பருவமழையால் சாலைகளில் நீர் தேக்கம்: வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்

பருவமழையால் சாலைகளில் நீர் தேக்கம்: வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்

Update: 2017-11-04 22:45 GMT

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அயனாவரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரணப் பணிகளை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, கே.சி.கருப்பணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர், மண்டலம் 6–க்கு உட்பட்ட ஓட்டேரி பக்கிங்காம் கால்வாய், அம்பேத்கர் கல்லூரி சாலை, டிகாஸ்டர் சாலை, சின்னபாபு தெரு ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவது குறித்தும், மேற்கொள்ளப்படவேண்டிய நிவாரணப் பணிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, ஜி.எம்.ஆர் பகுதி, நல்லாறு பக்கிங்காம் கால்வாய், பேசின்பிரிட்ஜ் இணைப்புச் சாலைஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவதற்காக, அங்குள்ள தடுப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட ரெயில்வே நிர்வாகத்திடமும், ஜி.எம்.ஆர் நிர்வாகத்திடமும் கலந்துபேசி தடுப்புகளை அகற்றி மழைநீரை வெளியேற்றினர். இந்த ஆய்வின் போது ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் காமராஜ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்