இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபொழுது எங்கே சென்றீர்கள்? ராகுல் காந்திக்கு தமிழிசை கேள்வி
மெர்சல் திரைப்படத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபொழுது எங்கே சென்றீர்கள் ராகுல்? என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் மருத்துவ துறையில் நடக்கும் தவறுகளை மையமாக வைத்து வந்துள்ளது. விஜய் ஐந்து ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். வசூலிலும் இந்த படம் சாதனை நிகழ்த்தி வருகிறது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. வரி பற்றிய வசனத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ஜி.எஸ்.டி. வசனத்தை நீக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சியினர் வற்புறுத்தி உள்ளனர். மருந்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளனர். ஆனால் தாய்மார்கள் தாலியை அறுக்கும் சாராயத்துக்கு ஜி.எஸ்.டி. வரி கிடையாதாம் என்றும், 7 சதவீதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கும் சிங்கப்பூரில் மக்களுக்கு இலவச மருத்துவம் தர்றாங்க. 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கும் இந்தியாவில் ஏன் இலவச மருத்துவம் தர முடியவில்லை என்றும் விஜய் பேசும் சர்ச்சைக்குரிய வசனங்கள் படத்தில் இடம்பெற்று உள்ளன. இந்த வசனம் மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆட்சியை விமர்சிப்பதாக உள்ளது என்று அந்த கட்சியினர் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில், விஜயின் திரைப்படத்திற்கு டுவிட்டர் வழியே காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், திரு.மோடி அவர்களே, திரைப்படம் என்பது தமிழக கலாசாரம் மற்றும் மொழி ஆகியவற்றின் ஆழ்ந்த வெளிப்பாடு.
மெர்சல் திரைப்படத்தில் தலையிட்டு தமிழக பெருமைக்கு ஊறு விளைவிக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
மெர்சல் படத்திற்கு ஆதரவு அளித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கையில் காங்கிரஸ் கட்சியின் துணையோடு தமிழர்கள் கொல்லப்பட்டபொழுது எங்கே சென்றிருந்தீர்கள் ராகுல்? என கேள்வி எழுப்பியுள்ளார்.