இன்றைய பாராளுமன்ற செயல்பாடுகள் ஏமாற்றம் அளிக்கிறது ப.சிதம்பரம் பேச்சு
இன்றைய பாராளுமன்ற செயல்பாடுகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
சென்னை,
சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலை பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பாராளுமன்றத்தின் செயல்பாடு என்ன என்று விழிப்புணர்வு ஏற்படுத்த நேற்று மாதிரி இளைஞர் பாராளுமன்றம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி.மேல்நிலைப்பள்ளி, அதே பள்ளியை சேர்ந்த மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி, அயனாவரம் பெத்தேல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்பட 8 பள்ளிக்கூடங்களின் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டு இளைஞர் பாராளுமன்றத்தை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-
நான் இந்த பள்ளிக்கூடத்தில் படித்தபோது இருந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை நினைத்துப் பார்க்கிறேன். இப்போது பள்ளி பல முன்னேற்றங்களை கண்டு உள்ளது.
ஜனநாயக அடிப்படையில் செயல்படக்கூடியது இந்திய பாராளுமன்றம். பலதரப்பட்ட மொழிகள், கலாசாரம், மதங்கள் என வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் பெருமை. இது உலக நாடுகளுக்கு ஆச்சரியத்தை அளித்துக்கொண்டிருக்கிறது. இருந்தபோதிலும் இப்போதுள்ள பாராளுமன்ற நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை.
உலகிலேயே இங்கிலாந்து பாராளுமன்றம்தான் ஒரு நாளும் தடை படாமல் நடத்தப்படுகிறது. அங்கு மக்கள் பிரச்சினை, கலவரம் எது வந்தாலும் தொடர்ந்து நடைபெற்று பிரச்சினைகள் விவாதிக்கப்படுகின்றன. வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டுள்ள இந்தியா, இங்கிலாந்து பாராளுமன்ற நடைமுறைகளை பின்பற்றவேண்டும்.
அது மட்டுமன்றி நம்முடைய பல மாநிலங்களில் சட்டபேரவைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் ராஜாஜி, பக்தவச்சலம், காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று அனைத்து முதல்- அமைச்சர்களும் விவாதங்களுக்கு பதில் அளித்துள்ளனர்.
ஆனால் இன்றைய பாராளுமன்றத்தின் நிலைமை ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. பிரதமரும், சில மந்திரிகளும் பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் முழுமையாக பங்கேற்பது இல்லை. மக்கள் பிரச்சினை குறித்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதும் கிடையாது. பாராளுமன்றம்தான் ஆட்சியாளர்கள் பதில் அளிக்க வேண்டிய மற்றும் பொறுப்பு ஏற்க வேண்டிய பெரிய அமைப்பாக உள்ளது. எனவே பாராளுமன்றத்தின் இந்த நிலை மாறவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடக்கத்தில் எம்.சி.சி. பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.ஜே.மனோகர் வரவேற்றார். சுமந்த் சி.ராமன் உள்பட பலர் பேசினர். இதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகள் மாதிரி இளைஞர் பாராளுமன்றம் நடத்தினர். இன்றும் (சனிக்கிழமை) இந்த நிகழ்ச்சி நடக்கிறது.