வனத்துறை அலுவலகத்தில் ரொக்கப்பணம், தங்க காசுகள் பறிமுதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில், மாவட்ட வனத்துறை அலுவலகம் உள்ளது.
சென்னை,
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில், மாவட்ட வனத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் , லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள்.
சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.3.80 லட்சம் ரொக்கப்பணமும், 110 கிராம் எடை உள்ள தங்க காசுகளும் சிக்கியது. அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது