ஜெ.தீபாவுக்கு கொலை மிரட்டல் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா கையெழுத்திட்ட புகார் மனு ஒன்றை வக்கீல் தொண்டன் சுப்பிரமணியன் என்பவர் நேற்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கொடுத்தார்.

Update: 2017-10-11 23:15 GMT

சென்னை,

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:–

நான் அ.தி.மு.க. ஜெ.தீபா அணி மற்றும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளராக பணியாற்றுகிறேன். எங்கள் அமைப்பில், மதுரையை சேர்ந்த வக்கீல் பசும்பொன்பாண்டியன் என்பவர் பணியாற்றினார்.

அவர் எங்கள் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதையொட்டி எனது செல்போனில் தொடர்பு கொண்டு மிகவும் கேவலமான முறையில் என்னை திட்டி, சிலர் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். என்னை தமிழ்நாட்டை விட்டே விரட்டுவோம் என்று மிரட்டுகிறார்கள். எனவே எனது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிப்பதோடு கொலைமிரட்டல் விடுப்பவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்.  இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்