ரெயிலில் பயணிகளை பயம் காட்டிய மாணவர்கள் வாழ்க்கையில் இனி ரயிலுக்கே வரமாட்டோம் போலீசிடம் கெஞ்சல்
ரெயிலில் பயணிகளை பயம் காட்டிய மாணவர்கள் வாழ்க்கையில் இனி ரயிலுக்கே வரமாட்டோம் என போலீசிடம் கெஞ்சி மன்னிப்பு கேட்டனர்.
சென்னை
பஸ் டே என கொண்டாடி வந்த மாணாவர்கள், பேருந்தின் மீது ஏறியும், போக்குவரத்து இடையூறும் செய்யும் விதமாக அட்டகாசம் செய்வதால் போலீஸாரால் அப்படிப் பட்ட நிகழ்வுக்கு தடை விதித்தது.
இந்நிலையில், மாணவர்கள் கத்தி, கம்பு, வீச்சறுவாள், பட்டாசு உள்ளிட்ட அபாயகரமான பொருட்களுடன் ரெயிலில் தொங்கிய படி சாகசம் செய்த சம்பவம் பொதுமக்களை அதிரசெய்துள்ளது.
ரெயிலில் பட்டாசு எடுத்துச் செல்லக்கூடாது என்ற சட்டம் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மாணவர்கள் கத்தி, பட்டாசுகளுடன் சென்றது அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து, நெமிலிச் சேரிக்கு செல்லும் புறநகர் ரெயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் இந்து கல்லூரி ரெயில் நிலையத்தில் சென்னை மாநில கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர் நேற்று மாலை 3.30 மணிக்கு வீச்சரிவாளுடன் சுற்றித்திரிந்தனர். இதனால் பீதியடைந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் துணை கமிஷனர் சர்வேஷ்ராஜ் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் நந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பழனி, ராஜபாண்டி, குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் வீச்சரிவாளுடன் இருந்த கல்லூரி மாணவர்கள் 4 பேரை கைது செய்தனர். மற்ற சில மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
நேற்று மாலை 4 மணிக்கு இந்து கல்லூரி ரெயில் நிலையத்தில் மாநில கல்லூரி மாணவர்கள் சிலர் அதேபோல் ரெயிலில் நின்றுகொண்டு பிளாட்பாரத்தில் கத்தியை தேய்த்துக்கொண்டு வந்தனர். அப்போது பிளாட்பாரத்தில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்த்பகதூர் மற்றும் போலீசார் அந்த மாணவர்களை பிடிக்க முயன்றனர்.
ரெயில் நிலையத்தில் இருந்து தப்பி வெளியே ஓடிய அவர்களில் 4 மாணவர்கள் உள்பட பலரை அங்கு தயாராக இருந்த பட்டாபிராம் போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவர்களில் 4 மாணவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். சில மாணவர்களை அவர்களது பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர்.
கைதானவர்கள் பாக்கம் அருந்ததிபாளையத்தை சேர்ந்த தண்டபானி (வயது 19), திருவள்ளூரை அடுத்த கரிக்கலவாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (19) மற்றும் 17 வயது மாணவர்கள் 2 பேர் என்பது தெரிந்தது. அவர்களை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 4 வீச்சரிவாளை போலீசார் கைப்பற்றினர். தப்பி ஓடிய மற்ற மாணவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
சும்மா பந்தா காட்டுவதற்காகவே அப்படி செய்ததாகவும், வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தால் தங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் மாணவர்கள் முன்னதாக போலீசாரிடம் புலம்பினர்.
இந்த நிலையில் இந்து கல்லூரி ரெயில் நிலையம் அருகே கத்தியுடன் திரிந்த ஒரு மாணவரை போலீசார் பிடித்து உள்ளனர். மேலும் சில மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் அத்துமீறலில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர்கள் இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இப்ராஹிம், முத்துப்பாண்டி ஆகியோரிடம் பட்டாபிராம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாழ்க்கையில் இனி ரயிலுக்கே வரமாட்டோம். கத்தியோடு ரகளை செய்த மாணவர்கள் கண்ணீர்மல்க போலீசாரிடம் மன்னிப்பு கேட்டனர்.