கணவர் நடராஜனை சந்தித்து நலம் விசாரிக்க பெரும்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றார் சசிகலா

கணவர் நடராஜனை சந்தித்து நலம் விசாரிக்க பெரும்பாக்கம் மருத்துவமனைக்கு அதிமுக (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா சென்றார்.;

Update: 2017-10-07 07:02 GMT
சென்னை,

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கணவர் நடராஜனை பார்ப்பதற்காக 5 நாட்கள் பரோலில் வருகை தந்துள்ளார்.

நேற்று பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, இன்று காலை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை சந்தித்து சசிகலா நலம் விசாரித்தார்.

மேலும் செய்திகள்