புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: மருத்துவமனை
புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று குளோபல் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சென்னை,
உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் புதிய பார்வை ஆசிரியர் ம. நடராஜன் அனுமதிக்கபட்டுள்ளார். ம. நடராஜனுக்கு சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
நடராஜனின் உடல் நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குளோபல் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- “ நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு நடராஜன் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல் நிலையில் அடுத்து சில நாட்கள் மிக முக்கியமானவையாக இருக்கும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.