வீடு புகுந்து பெண் டாக்டருக்குக் கத்திக்குத்து பெண் வேடத்தில் வந்த கூலிப்படை
பர்தா அணிந்து வந்த மர்ம நபர்கள், வீட்டில் புகுந்து பெண் டாக்டரைக் கத்தியால் குத்தி கொலைசெய்ய முயன்ற சம்பவம் சென்னையில் பகுதியில் பரபரப்பையு ஏற்படுத்தியுள்ளது.;
சென்னை பெரம்பூர் பட்டேல் ரோடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் டாக்டர் ரம்யா. இவர் கோயம்பேட்டில் மருத்துவமனை நடத்தி வருகிறார். நேற்றிரவு பணி முடிந்து ரம்யா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, 3 பெண்கள் வீட்டின் வெளியே நோட்டமிட்டபடியும் இரண்டு பேர் பர்தா அணிந்தபடி மறைந்திருக்கிறார்கள். வீட்டுக்குள் சென்ற ரம்யாவை இரண்டு பேர் கழுத்து, இடுப்பு, முதுகில் கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.
ரம்யாவின் அலறல் சத்தம்கேட்டு அருகில் உள்ளவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரம்யாவை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இது தொடர்பாக பர்தா அணிந்து பெண்கள்போல் வந்த மர்ம நபர்களைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தனியார் மருத்துவமனை உரிமையாளர் தாமஸ், பழனிசாமி, யோனா, முகிலன், சத்தியகலா, பவானி உட்பட 6 பேரைக் கைதுசெய்தனர். அப்போது அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சூளைமேட்டிலுள்ள சென்னை பெர்லிட்டி சென்டர் என்ற தனியார் நிறுவனத்தை தாமஸ் என்பவர் நடத்தி வருகிறார். இதில் டாக்டர் ரம்யா பணியாற்றியுள்ளார்.
பின்னர் அங்கிருந்து விலகி கோயம்பேட்டில் மருத்துவமனையைத் தொடங்கியுள்ளார் ரம்யா. இந்த மருத்துவமனைக்கு பெர்லிட்டி சென்டரில் பணியாற்றிய இரண்டு பேர் ரம்யா மருத்துவமனைக்கு வேலைக்குச் சென்றனர். இதனால் ரம்யாவுக்கும் தாமஸுக்கும் தொழில்போட்டி காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரம்யாவைக் கொலை செய்ய தாமஸ் திட்டமிட்டுள்ளார்" இதை தொடர்ந்து அவர கூலிப்படையை ஏவு உள்ளார். என்று தெரியவந்துள்ளது.