சென்னை தியாகராய நகரில் தனியார் உணவு விடுதியில் தீ விபத்து
சென்னை தியாகராய நகரில் தனியார் உணவு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் தியாகராய நகரில் உள்ள பாண்டிபஜார் பகுதியில் தனியார் உணவு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த உணவு விடுதியில் திடீரென இன்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.