டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்டுபிடிப்புக்கான போட்டிகள்
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாநில அளவில் அறிவியல் கண்டுபிடிப்புக்கான போட்டிகள் அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 7-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் 6 துறைகளும், முதுநிலை பட்டப் படிப்பில் 6 துறைகளும் உள்ளன. கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முக்கிய பங்காற்றி வருகிறது.
கல்லூரி நிர்வாகம் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் மதிப்பு கூட்டு பயிற்சி இலவசமாக நடத்தி வருகிறது. ‘நிகிஜிணி, GRE ’ நுழைவுத்தேர்வுகளுக்கு கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவர்களின் வளர்ச்சிக்காக நல்ல முறையில் பயிற்சி அளிக்க, வேலைவாய்ப்புகளை பெற்றுத்தர பிரத்யேகமான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாணவர்கள் பன்னாட்டு நிறுவனத்தில் ஆண்டுதோறும் வளாகத்தேர்வு மூலம் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிகள்
பள்ளி மாணவர்களின் அறிவியல் திறன் மற்றும் அவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் பொருட்டு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் கண்டு பிடிப்புக்கான போட்டிகள் மற்றும் கலைத்திறனை வெளிப்படுத்துவதற்கான போட்டிகள் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதி நடைபெற உள்ளது.
மேலும், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிகள் அடுத்த மாதம் 6-ந் தேதி நடக்கிறது. மாணவர்கள் பலர் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உடையவராக உள்ளனர். அவர்களின் திறனை இந்த உலகம் காண ஓர் அறிய வாய்ப்பை இந்த போட்டியின் மூலம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஏற்படுத்தி உள்ளது.
பரிசுகள் வழங்கப்படும்
இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் பொருட்டு நடத்தப்படும் இப்போட்டிகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம். இந்த போட்டியில் பங்குபெறும் மாணவர்கள் அவர்களின் அறிவியல் சார் கண்டுபிடிப்புகளின் கருத்து சுருக்கம் மற்றும் செயல் விளக்க மாதிரிகளின் தொகுப்பை இந்த மாதம் (செப்டம்பர்) 25-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரப்பட்டியல் 27-ந் தேதி அறிவிக்கப்படும். மாணவர்கள் அக்டோபர் 3-ந் தேதிக்குள் தங்களின் முழு விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு கட்டணம் கிடையாது. மேலும், மாணவர்கள் போட்டியில் பங்கு கொள்ள வரும்போது தங்களுக்கான அடையாள அட்டை மற்றும் ‘போனபைடு’ சான்றிதழை தவறாமல் கொண்டு வர வேண்டும்.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அரிய பல கண்கவர் பரிசுகள் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 04639-242482 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது sacoeprojectexpo17@gmail.com என்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.