24–ந் தேதி வரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்

மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் தற்காலிகமாக ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு.;

Update: 2017-09-11 21:30 GMT
மதுரை, 

காவிரி புஷ்கர விழாவை முன்னிட்டு மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் தற்காலிகமாக ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல தென்னக ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.  

இது குறித்து மதுரை கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் வீராசுவாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவிரி மகா புஷ்கரத்தை முன்னிட்டு மதுரை–சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் (செவ்வாய்க்கிழமை) வருகிற 24–ந் தேதி வரை இருமார்க்கங்களிலும் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்