காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது.;
பென்னாகரம்,
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்றுமுன்தினம் வினாடிக்கு 22,700 கன அடியாக அதிகரித்தது. இதனால் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த நீர்வரத்தை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் அளந்து கண்காணித்தனர். இந்த நீர்வரத்து மாலை வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
இந்தநிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறையத்தொடங்கியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்த போதிலும் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 8-வது நாளாக நீடித்தது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்தனர். அவர்கள் மெயின் அருவியில் குளித்தனர். மேலும் தொங்கு பாலம், பார்வை கோபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 8 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 77 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
நேற்று முன்தினம் காலை 69.05 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 71.18 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் அணை நீர்மட்டம் வேகமாக உயரும். இதைத்தொடர்ந்து அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க சாதகமான சூழ்நிலை உருவாகும்.