துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

துணை முதல்வராக ஓ பன்னீர்செல்வத்திற்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தற்கு எதிரான மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Update: 2017-09-08 06:50 GMT
சென்னை, 

அ.தி.மு.க.வின் இரண்டு முக்கிய அணிகளான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணிகள், நீண்ட இழுபறிக்குப் பிறகு அண்மையில் ஒன்றிணைந்தது. இதையடுத்து, துணை முதல்வராக ஓ பன்னீர் செல்வம் நியமனம் செய்யப்பட்டார்.  அதன்படி கடந்த 21-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கறிஞர் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், ஆளுநரின் இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி சென்னை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

மேலும் செய்திகள்