டிடிவி தினகரன் தலைமையில் 4 எம்.எல்.ஏக்கள் 6 எம்.பிக்கள் கவர்னருடன் சந்திப்பு

டிடிவி தினகரன் தலைமையில் 4 எம்.எல்.ஏக்கள் 6 எம்.பிக்கள் இன்று காலை 11.30 மணிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவை சந்திக்கின்றனர்

Update: 2017-09-07 05:28 GMT
சென்னை

டி.டி.வி.தினகரன், தனது ஆதரவு 6 பேர் எம்.பி.க்கள் மற்றும் 4 எம்.எல்.ஏ.க்கள் உடன் இன்று காலை 111.30 மணிக்கு கவர்னரை சந்திக்க செல்கிறார் . அப்போது, சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்த உள்ளார் என கூறப்படுகிறது.

எம்.எல்.ஏக்கள் ரத்தின சபாபதி, கருணாஸ், கலைச்செல்வன் ஆகியோர் செல்கின்றனர். எம்.பிக்கள் விஜிலா சத்யானந்த், நாகராஜன் , செங்குட்டுவன், உதயகுமார், நவநீத கிருஷ்ணன், கோகுல கிருஷ்ணன்,ராதா கிருஷ்ணன் ஆகியோர் கவர்னரை சந்திக்க தினகரனுடன் செல்ல உள்ளனர்.

புதுவையில் தங்கி இருந்த எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை 7.45 மணி அளவில் இங்கிருந்து காரில் சென்னை புறப்பட்டனர்.

மேலும் செய்திகள்