நீட் தேர்வில் விலக்கு வரும் என, மத்திய அரசு நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டது வைகோ

நீட் தேர்வில் விலக்கு வரும் என, மத்திய அரசு நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டது என அரியலூரில் வைகோ கூறியுள்ளார்.;

Update: 2017-09-06 14:51 GMT
சென்னை,

அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வு முறையால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். 
இது தமிழகம் முழுவதும் மாணவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அரசியல் கட்சிகளை தொடர்ந்து கடந்த 4ந் தேதி முதல் பள்ளி-கல்லூரி மாண வர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.மாணவி அனிதா தற் கொலைக்கு நீதி கேட்டும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம், மறியல், மனித சங்கிலி, பேரணி ஆகிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் குழுமூரில் உள்ள  மாணவி அனிதாவின் பெற்றோரை நேரில் சந்தித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆறுதல் கூறினார். அதனைதொடர்ந்து அவர் செய்தியார்களிடம் கூறுகையில்,

நாடு முழுவதும் ஒரே கல்வி கொள்கை என்பது சாத்தியம் இல்லாதது. மாநில கல்வி கொள்கையில் படித்தவர்களுக்கு மருத்துவம் படிக்க முன்னுரிமை தர வேண்டும். நீட் தேர்வில் விலக்கு வரும் என, மத்திய அரசு நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டது. அனிதா மரணத்திற்கு மத்திய அரசே முழுபொறுப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்