நீட் தேர்வு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பின்பற்ற வேண்டிய நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டது - முதல்வர் பழனிசாமி
நீட் தேர்வு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பின்பற்ற வேண்டிய நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கோவை
ஈரோட்டில் நடைபெறும் எம்.ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கந்து கொள்ள முதல் அமைச்சர் சென்றார். அவர் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் பதவியேற்றதில் இருந்து ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார். எங்கள் மீது ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது. எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 109 பேர் பங்கேற்றனர், பல்வேறு காரணங்களால் சிலர் பங்கேற்கவில்லை.
தமிழக அரசுக்கு முழு பெரும்பான்மை உள்ளது . நீட் தேர்வு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பின்பற்ற வேண்டிய நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு கடைசிவரை போராடியது இவ்வாறு அவர் கூறினார்.