மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

மாணவி வளர்மதி மீது தாக்கல் செய்யப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது;

Update: 2017-09-05 07:55 GMT
புதுக்கோட்டை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தைத் தூண்டியதாகக் கூறி, பெரியார் பல்கலைக்கழக இதழியல் துறை மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டார். அவர் போராட்டத்திற்கு இளைஞர்களை அழைக்கும் விதமாக அவர் தன் நண்பர்களுடன் துண்டுப் பிரசுரம் விநியோகித்தார் என்பதற்காக அவர் மீது  குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனை ரத்துசெய்யக்கோரி அவரது தந்தை சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி வளர்மதி மீது தாக்கல் செய்யப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை ஐகோர்ட் ரத்துசெய்து உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்